முறிந்து விழுந்த ஆலமரம்; சிக்கிய சிறுவன்..!! பிராட்வே பேருந்து நிலையத்தில் பயணிகள் தவிப்பு..!!
சென்னை புறநகர் பேருந்துகளில் ஒன்றான பிராட்வே பேருந்து நிலையத்தில், நேற்று நள்ளிரவில் ஆலமரம் ஒன்று சரிந்து அதன் மேற்கிளை முறிந்து விழுந்துள்ளது..
அந்த பகுதியில் பெரும்பாலும் நரிக்குறவ இனத்தவர்களும், தெரு ஓரத்தில் வசிப்பவர்களும் இருந்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே மரத்தின் மேற்கிளையில் முறிவு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட அதிக மழை மற்றும் புயல் காரணமாக முறிவு அதிகமாகியுள்ளது.
நேற்று இரவு எதிர்பாராத விதமாக மரம் விழுந்துள்ளது.. அதில் அந்த இடத்தில் அனைத்து கூரை வீடுகள் மீதும் சாய்ந்துள்ளது.. அதில் ஒரு சிறுவன் மட்டும் விளையாடுவதற்காக வெளியே வந்துள்ளான். அந்த சமயத்தில் மரம் விழுந்ததால் சிறுவன் விபத்தில் சிக்கி கொண்டுள்ளான்.
இரத்த வெள்ளத்தில் சிறுவனை மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த பகுதியில் இருந்த ஒரு சில வீடுகள் மட்டும் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால்.., பேருந்துகள் சுற்றிவிடப் பட்டுள்ளன. எனவே பயணிகள் நீண்ட நேரம் பேருந்திற்காக காத்திருந்துள்ளனர். ஒரு சில பயணிகள் செல்ல வேண்டிய பேருந்து ஒரு மணி நேரம் ஆகியும் வரவில்லை என்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதிலும் அங்கு மீட்பு பணிக்காக அங்கு வந்த காவலர் ஒருவர்.. பாதிக்கப் பட்டவர்களிடமும், பயணிகளிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த மற்றொரு காவலர் வந்து பாதிக்கபட்டவருக்கு உதவி செய்தார்.