ஒரு நாள் ஸ்கூல் லீவு கேட்ட 12 வயது சிறுவன்.. தாய் கண்டித்ததால் விபரீத முடிவு..!
சென்னை தாம்பரம் அடுத்த படப்பை அருகே ஆரம்பாக்கம் ஆதிபராசக்தி கோவில் தெருவில் வசித்து வருபவர் ரிச்சர்ட் (வயது 39). இவருக்கு திருமணமாகி மீனா (வயது 36) என்ற மனைவி உள்ளார்.
கணவர் மனைவி இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் தோனி (12) படப்பை அருகே ஆத்தனஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் தோனி சரியாக படிக்காமல் இருந்து வந்துள்ளார். ”அதுமட்டுமின்றி நேற்று பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறி அடம்பிடித்ததால் பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர்.
பின்னர் இன்று ஒரு நாள் மட்டும் லீவு எடுத்துக்கொள் ஆனால் நாளை முதல் ஒழுங்காக பள்ளிக்கு செல்ல வேண்டும். எனக் அறிவுரை கூறியுள்ளனர். மேலும் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வை எனக்கூறி காசு கொடுத்து விட்டு” இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர்.
இதையடுத்து ரேசன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு மீதி இருந்த காசை எடுத்துக் கொண்டு படப்பை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்க்கு சென்றுள்ளான்.
அங்கு பெட்ரோல் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று விளக்கை ஏற்றி வைத்து தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றியுள்ளார். அப்போது எறிந்து கொண்டிருந்த விளக்கின் நெருப்பு அவர் மீது பட்டு தீப்பிடித்து எறிந்தது.
இதனால் வலி தாங்க முடியாமல் அலறி அடித்தபடி கழிவறையில் இருந்து வெளியே வந்த அந்த சிறுவனின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போர்வையால் மூடி அவரை மீட்டனர்.
இருப்பினும் உடல் முழுதும் தீ பரவியதால் தீக்காயங்களுடன் சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்