கொலை செய்யப்பட்ட மனைவி..! தற்கொலை செய்துக் கொண்ட கணவர் கேரளாவில் சிக்கிய கும்பல்..!
கேரளா மாநிலத்தில் மனைவிகளை தகாத உறவிற்காக மாற்றிக்கொள்ளும் சம்பவம் கடந்த ஒரு ஆண்டுகளாக சமூக வலைத்தளங்கள் பேசும் பொருளாக பரவி வருகிறது. ஒரு ஆண்டுக்கு முன் கேரளா சங்னாச்சேரி பகுதியை சேர்ந்த, இளம்பெண் ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![]()
பேஸ்புக், வாட்ஸ் ஆப், மற்றும் இன்ஸ்டாகிராமில், கப்பிள் மீட் ஆஃப் கேரளா என்று ஒரு குரூப் அமைத்து இதை செய்து வருகின்றனர். அதில் திருமணம் ஆன 2 வருட தம்பதியர்களில் இருந்து 20 வருட தம்பதியர்கள் வரை செயல் பட்டுவைத்துள்ளனர்.
இதையெல்லாம் முதன் முறையாக வெளியே கொண்டு வந்தது. அதே கேரளா பகுதியை சேர்ந்த ஜூபி ஜேக்கப் என்ற 28 வயது இளம்பெண். திருமணம் ஆகி சில மாதங்கள் கழித்து, தன் கணவரே பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க சொல்லுவதாகவும், உடல் உருவில் ஈடுபட சொல்லி வற்புறுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பெயரில் இதில் சம்மந்த பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு ஒரு வருடமாக தொடர்ந்து வந்த நிலையில் மே 19ம் தேதி 2023 அன்று ஜேக்கப் ஜூபி மர்ம நபர்களால் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர், ஆனால் ஜூபியின் பெற்றோர்களுக்கு, அவரின் கணவர் ஷினோ மேத்யூ மீது சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகம் குறித்து கடந்த 3 நாட்களுக்கு முன் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை ஏற்ற காவல் துறையினர், கேரளா சென்று பார்த்த பொழுது, ஷினோ மேத்யூ மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர் பரிசோதனையில் அவர் விஷம் குடித்தது தெரியவந்தது.
தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை உயிர் இழந்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-வெ.லோகேஸ்வரி.

















