கரூர் திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய கூடைப் பந்து போட்டி இறுதி ஆட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார். அதன் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எத்தனை சோதனை நடந்தாலும் அதனை தாங்கும் வல்லமையை முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு தந்துள்ளார்.
இதனால் எந்த சோதனை வந்தாலும் அதை எதிர் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆயிரம் சோதனை வந்தாலும் அதை எதிர் கொள்ளோம். எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி என கடுமையாக விமர்சித்தார்.
வரும் மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லும். கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணியில் செய்ய விடாமல் யாரும் தடுக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே கட்சி தொண்டர்கள் கேள்வி எழுப்பினார்.
ஒரு சில இடங்களில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றது. வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்றார்.