தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இன்று காலை மர்ம நபர்கள் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் கொடுத்த தகவலின் படி வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வங்கி முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
வெடிகுண்டு நிபுனர்களின் சோதனையில் பொய்யான தகவல் என தெரியவரவே, மிரட்டல் விடுத்த மர்ம மீது தி.நகர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















