பொண்டாட்டியை அடிக்காதடா என தடுத்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் ராசிபுரத்தில் அரங்கேறியுள்ளது.
ராசிபுரம் அருகே கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்ப்பட்ட நிலையில் அதை தடுக்க வந்த சித்தப்பாவை கத்தியால் குத்தியதில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜியகுமார்(27).இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோகினி. விஜயகுமாருக்கு மது போதை பழக்கமும் அளவுக்கு அதிகமான கஞ்சா பழக்கமும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி மது போதையில் வரும் விஜியகுமார் மனைவி ரோகினியிடம் தகராறு செய்வான் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் விஜியகுமார் மது போதையில் வீட்டில் வந்த நிலையில் கணவன் மனைவியே இடையே பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது விஜயகுமாரின் சித்தப்பா சேட்டு (60) என்பவர் கணவன் மனைவி இருவரையும் தடுத்து சண்டையிட வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த விஜியகுமார் அருகே இருந்த காய்கள் வெட்டப்படும் கத்தியால் தன் சொந்த சித்தப்பா என பார்க்காமல் மார்பு பகுதி வயிறு என மூன்று இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.
கத்தியால் குத்தப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சேட்டுவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேட்டு பரிதாபக உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மனைவியை அடிக்காதே என்று தடுத்த சொந்த சித்தப்பாவை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















