தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவர் தனது பதவியை ராஜினாமா செய்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார் .
இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற அவரது சுயசரிதை வெளியிட்டு விழாவில் இதனை அறிவித்திருந்தார் சரத்பவார். அப்போது பேசிய அவர், “அடுத்து வரும் புதிய தலைமுறையினர் கட்சிக்கு வழிகாட்ட வேண்டிய நேரம் இது. தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சியின் செயற்குழு முடிவெடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் சரத்பவார் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு வெளியே, சரத்பவார் பதவியில் இருந்து விலகக்கூடாது என கட்சியின் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருவதை மனதில் கொண்டும், கட்சி மூத்த உறுப்பினர்கள் எனது முடிவை மறுபரிசீலனை கேட்டுக்கொண்டதாலும் இப்படியொரு முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

















