தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோபாலா (69) உடல் நலக்குறைவால் இன்று மதியம் 1.00 அளவில் உயிரிழந்தார்
. அவரது இறுதிச்சடங்கு நாலை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளது.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞராக வலம் வந்த மனோபாலாவின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வரை பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.@manobalam
— Rajinikanth (@rajinikanth) May 3, 2023
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ பிரபல இயக்குனரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது., அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத்…
— Kamal Haasan (@ikamalhaasan) May 3, 2023
உலகநாயகன் கமல்ஹாசன் “நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/khushsundar/status/1653718787672211457
நடிகை குஷ்பு, “மனோபாலா சாரின் அற்புதமான நடிகரை/இயக்குனரை இழந்துவிட்டோம் என்று கேட்டு மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். அவர் ஒரு பெரிய மனிதர். எப்போதும் உதவி மற்றும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். சினிமாவுக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. அவர் தவறவிடப்படுவார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி!” என ட்வீட் செய்துள்ளார்.
திறமையான இயக்குனர், கனிவான தயாரிப்பாளர், அருமையான நடிகர், அனைவருக்கும் பிடித்த மிகச்சிறந்த மனிதர் மனோபாலா அவர்கள் இறப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பு.#மனோபாலா #manobala #RIPManobala pic.twitter.com/G7Rn8Iy9il
— Actor Soori (@sooriofficial) May 3, 2023
நடிகர் சூரி, “திறமையான இயக்குனர், கனிவான தயாரிப்பாளர், அருமையான நடிகர், அனைவருக்கும் பிடித்த மிகச்சிறந்த மனிதர் மனோபாலா அவர்கள் இறப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பு” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு, “ஐயா மனோபாலாவின் இழப்பு குறித்து கேள்விப்பட்டு மனம் உடைந்துவிட்டேன். இந்த கடினமான நேரத்தில் அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக்கூறியுள்ளார்.
https://twitter.com/SilambarsanTR/status/1653684672826851334
“என் மாணவன், மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
“நடிகர் மனோபாலாவின் இறப்பு அதிர்ச்சியளிக்கிறது. அனைவைடமும் அன்பாகப் பழகக்கூடியவர். நடிகர் மனோபாலாவின் மரணம் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என வடிவேலு தெரிவித்துள்ளார்.

















