யோகமாக வாழ அருள் தரும் – யோக நரசிம்மர்
திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியே இருக்கும் கருப்பத்தூர் கிராமத்தில் காவேரி ஆற்றங்கரை உள்ளது. இந்த காவேரி ஆற்றங்கரையில் அந்த கிராம மக்கள், தண்ணீர் குடிக்க, குளிக்க, துணி துவைக்க என பலவிதமாகவும் பயன் படுத்தி வந்துள்ளனர்.
அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தினமும், அந்த ஆற்றில் துணி துவைத்து விட்டு, ஆற்றில் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். நாளடைவில் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் கனவில் நரசிம்மர் தோன்றி, நீ தினமும் துணி துவைக்கும் கற்களுக்கு பின் இருக்கும் கல்லில் தான், நான் இருக்கிறேன் என்று தெரியபடுத்தி இருக்கிறார்.

அதேப்போல் கருப்பத்தூர் கிராமத்தில் இருக்கும் நரசிம்மர் பக்தர், ஒருவரின் கனவில் தோன்றியும், காவிரி ஆற்றின் கற்களுக்கு பின்னால் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பின் இருவரும் எதார்த்தமாக அந்த இடத்திற்கு வந்து தங்களின் கனவில் வந்ததை ஒருவறுக்கு ஒருவர் பகிர்ந்துள்ளனர். பின் அந்த குறிப்பிட்ட கல்லை திருப்பி பார்த்துள்ளனர்.
அந்த கல்லின் பின்னால் நரசிம்மர் யோக நிலையில் இருந்திருக்கிறார். இதனை கண்ட இருவரும் யோக நரசிம்ம ஐயா நமோ நமக என இரு கைகள் தூக்கி வணங்கியுள்ளனர்.
யோக நரசிம்மரை தலையில் வைத்துக்கொண்டு இருவரும் புறப்பட்டுள்ளனர். சிந்தலவாடி எனும் கிராமத்தில் ஓய்வு பெறுவதற்காக நரசிம்மரை இறக்கி வைத்துள்ளனர். பின் இருவராலும் தூக்க முடியவில்லை.
இதை பற்றி வியாசக ராஜ ஹரியாச்சரிடம் கூறியுள்ளனர். அவரும் நரசிம்மர் காவிரி நீரில் தினமும் அபிஷேகம் செய்து வந்தவர்.

அவரை கொண்டு வந்தே நீங்கள் இங்கே அமர வைத்தால். அவர் எப்படி அதை விரும்புவார் என்று சொல்லி விட்டு.
காவிரி ஆற்றின் அருகே ஒரு கோவில் கட்டி, காவிரி நீரில் அபிஷேகம் செய்து பின் சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்கரித்து பூஜை செய்து வந்துள்ளனர்.
இந்த கோவில் தற்போது 2000 ஆண்டுகள் பழமையான கோவில் எனவும் புகழ் பெற்றது. இந்த கோவிலுக்கு சென்று நரசிம்மரை வழிபட்டால். சுப யோகமும், தீய சக்திகளின் பிடியில் இருந்து நீக்கமும் கிடைக்கும் என்பது அந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
Discussion about this post