திருவனந்தபுரம் அருகே நண்பர்களுடன் சேர்ந்து காதலனை கடத்திய, நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்திரவதை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் வர்க்கலா செர்னியூரை சேர்ந்த 19 வயதான லட்சுமி பிரியாவும் அதே பகுதியை சேர்ந்த 19 வயதான வாலிபரும் காதலித்து வந்த நிலையில் லட்சுமி பிரியாவிற்கு கல்லூரியில் வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இரண்டாவது காதலன் மீதான மோகத்தில் முதல் காதலனை மறந்த லட்சுமி பிரியா, அவரை தன்னுடன் பேச வேண்டாம் எனவும் மீறி பேசினால் தொலைத்து விடுவதாகவும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமி பிரியா நேற்று முன்தினம் முதல் காதலனை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.அவரது பேச்சை நம்பி அழைத்த இடத்திற்கு சென்ற முதல் காதலனை லட்சுமி பிரியாவும் , 2வது காதலனும் அவர்களின் கூட்டாளிகள் துணையுடன் முதல் காதலனை சரமாரியாக தாக்கி ஒரு காரில் ஏற்றி கடத்தி சென்று நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு போட்டு சித்ரவதை படுத்தியுள்ளனர்.
பின்னர் அவரது செல்போனை பறித்து கொண்டு கையில் இருந்த ரொக்கப்பணத்தையும் எடுத்து கொண்டு இருவரும் தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், 7 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், காதலி லட்சுமி பிரியாவையும், இரண்டாவது காதலனான எர்ணாகுளத்தை சேர்ந்த அமல் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

















