Convict Gnanasekaran gets 30 years in prison
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையில்லாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் (மே 28) ஆம் தேதி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிஎன தீர்ப்பு வழங்கியது மேலும் தண்டனை விவரத்தை ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு சாட்சி விசாரணை தொடங்கியது. இதில் மொத்தம் 29 பேர் சாட்சியம் அளித்தனர்.
ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு சார்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மே 20 முதல் 23 வரை இறுதி வாதங்கள் நடைபெற்றன.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, “ஞானசேகரனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் வலுவாக உள்ளது. குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இந்த நிலையில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரங்களை ஜூன் 2ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இன்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து ஞானசேகரன் சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, சரியாக 10.40 மணிக்கு நீதிபதி ராஜலட்சுமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். Convict Gnanasekaran gets 30 years in prison
அப்போது அவருக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத அளவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்ட நிலையில் அவருக்கு ரூ 90 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை சிறப்பாக விசாரணை நடத்திய காவலர்களுக்கு நீதிபதி பாராட்டுகளையும் தெரிவித்தார். Convict Gnanasekaran gets 30 years in prison