ஏறக்குறைய 38 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குநர் மணிரத்னம் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் மீண்டும் இணைந்துள்ள படம் தக் லைஃப். இந்த படத்தின் முதற்கட்ட கதையை கமல் எழுதி இருந்தாலும் அதை வேறு ஒரு பரிணாமத்திற்கு மாற்றி அமர் ஹே என்ற படத்தை தக் லைஃப் என மாற்றியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்திற்கு டிக்கெட் புக்கிங் இன்றுமுதல் தொடங்கியுள்ளது. Thug Life Ticket Booking
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் புரோமோஷன் வேலைகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஆனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சையாக மாறியதால், கன்னடத்தில் படம் வெளியாகுமா என்ற கேள்வி இப்போதுவரை தொடர்கிறது.
தக் லைஃப் படத்தில் மொத்தம் 5 பாடல்களுக்கு மட்டுமே திரைக்கதையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தனது அட்டகாசமான இசையால் பாடல்களின் எண்ணிக்கையை 9ஆக மாற்றியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். அதற்கும் இயக்குநர் மணிரத்னம் சரி என்று கூறியுள்ளார். நாயகன் படத்திற்கு பின்னர் இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் இணைந்துள்ளனர். இதனால் தக் லைஃப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Thug Life Ticket Booking
சர்ச்சையான கன்னட மொழி Thug Life Ticket Booking
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையாக மாறியதால், கர்நாடக அமைச்சர்கள் தொடங்கி, கர்நாடக திரைப்பட சம்மேளனம் உள்ளிட்ட பலரும் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாக வேண்டும் என்றால், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்கள். Thug Life Ticket Booking
ஆனால் கமல்ஹாசனோ, அன்பின் மிகுதியால் தான் நான் அப்படி பேசினேன். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது எனவும், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறியதைத் தான் நான் கூறினேன், அதேபோல் என்னை மிரட்டி பணிய வைக்கலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம், நான் இதைவிட மோசமான மிரட்டல்களை எல்லாம் சந்தித்திருக்கிறேன் என்று பொட்டில் அறைந்தாற்போல் கூறிவிட்டு அடுத்த கட்ட வேலைகளைப் பார்க்க ஆரம்பத்து விட்டார். Thug Life Ticket Booking
இப்படிபட்ட சூழ்நிலையில் தக் லைஃப் படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று முதல் அதாவது ஜூன் 1ஆம் தேதி காலை 9பது மணி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தொடங்கினாலும் அண்டை மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் படத்தின் புக்கிங் தொடங்கிவிட்டது. வெளிநாட்டில் ஏற்கனவே புக்கிங் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள புக்கிங்கில் காலை 9 மணி காட்சிகளுக்கும் சேர்த்து புக்கிங் தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வமாக டிக்கெட் புக்கிங் செய்து வருகிறார்கள். மேலும் காலை 9 மணி சிறப்புக் காட்சியில் இருந்தே படம் திரையிடப்படவுள்ளதால் முதல் நாளே படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பான்மையான தியேடர்களில் முதல் நாளுக்கான பெரும்பான்மையான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.