Rain in Chennai today TN Weatherman
தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. Rain in Chennai today TN Weatherman
குறிப்பாக நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்தது.
மேலும் இன்று தமிழகதில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Rain in Chennai today TN Weatherman
சென்னையை பொறுத்தவரையில், இன்று காலை முதலே மிதமான மழை பெய்து கோடையை குளிர்வித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் மக்களுக்கு மழை குறித்த தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
https://x.com/praddy06/status/1924289123147567546
அதில், ”சென்னை மழை – மே மாதத்தில் கடல் பக்கத்திலிருந்து மேகங்கள் நகர்கின்றன. என்ன ஒரு அரிய காட்சி. தேநீர் அருந்தி, உங்கள் பால்கனியில் இருந்து மழையை பார்ப்பதற்கு ஏற்ற காலை இது. நகரத்தின் சில பகுதிகளில் லேசான மழை தொடரும் என்று எதிர்பார்க்கலாம், அவ்வப்போது தூறல் பெய்யும்.
கடலுக்கு அருகிலுள்ள தென் சென்னை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை முழுவதும் அடுத்த 2 மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் திடமான மழை பெய்யும், சில நேரங்களில் சற்று தீவிரமாகவும், பின்னர் மீண்டும் மிதமான மழை பெய்யும். Rain in Chennai today TN Weatherman
இது சென்னைக்கு மிகவும் தகுதியான மழை. முழு வட தமிழகத்திலும் பருவமழை போன்ற ஒரு சூப்பர் டூப்பர் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
![]()
















