சூர்யவம்சம் பார்ட் -2 ஹீரோ யார் தெரியுமா..? ஷாக்-கான ரசிகர்கள்…!!
1997ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சூர்யவம்சம். இப்படம் 90ஸ் கிட்ஸ் களின் மறக்க முடியாத ஒரு படம் என்றும் சொல்லலாம்.
இந்த படத்தில் சரத் குமார், தேவயானி , ராதிகா, மணிவண்ணன், ஆனந்த்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் , இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது என்பது குறிப்படித்தக்கது.
கதை சுருக்கம் :
படிக்காமல் வேலையில்லாமல் இருக்கும் ஒருவர், தனது உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொள்ள நினைக்கிறார். ஆனால் அவர் படிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே அந்த பெண், அவரை திருமணம் செய்துக்கொள்ள மறுக்கிறாள். இதனால் ஹீரோ காதலில் தோல்வி அடைகிறார்.
தந்தையின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாத ஹீரோ, காதலித்து பெண்ணுக்காக தன்னை ஒரு கெட்டவனாக காட்டிக்கொண்டு தந்தைக்கு பிடிக்காத ஒருவராக மாறுகிறார். அப்போது தான் ஹீரோவின் வாழ்க்கையில் தேவதைப்போல ஒரு பெண் வருகிறார்.
ஹீரோவின் கடந்த வாழ்க்கையை தெரிந்து கொண்டு, அவரை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். ஆனால் இது ஹீரோவின் தந்தைக்கு பிடிக்கவில்லை, பின் இருவரும் குடும்பங்களை விட்டு பிரிந்து, ஒரு பேருந்து வாங்கி அதை வைத்து வாழ்வில் முன்னேறுகின்றனர். ஹீரோயினும் படித்து மாவட்ட ஆட்சியராகிறார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையால் அவர்களின் குடும்பம் ஒன்று சேறுவர்.
ஒருவருக்கு படிப்பு இல்லை என்றாலும் உழைக்கும் திறன் இருந்தால், அவரை சரியாக வழி நடத்தி செல்ல ஒரு பெண் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்பதை இப்படத்தின் கதை..
இதனாலேயே பலருக்கும் இப்படம் ஒரு Inspiration என்று சொல்லலாம். அதிலும் இப்படத்தில் வரும் “நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது” பாடல் பெரும் மோட்டிவேஷன் என்று சொல்லலாம். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஹீரோவாக நடிகர் சிவகார்திகேயன் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இதுதொடர்பான சில அறிவிப்புகளையும் நடிகை தேவையானியின் கணவரும், அப்படத்தின் இயக்குனருமான ராஜ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து விக்ரமன் சார் தான் முடிவெடுப்பார். சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கலாம் என்ற ஒரு ஆலோசனை இருப்பதாகவும், அதிலும் சரத்குமார் மற்றும் தேவையானி, நடிப்பார்கள் என தெரிவித்தார்.
இந்த படத்தில் சிவாகார்த்திகேயனை வைத்து எடுப்பது குறித்து விக்ரமன் மட்டுமே முடிவெடுப்பார். தற்போது சிவாகார்த்திகேயன் முன்னணி நடிகரில் ஒருவராக இருப்பதால் அவர் இந்த கதைக்கு பொருத்தமானவரா என்பது பற்றி ஆலோசித்து வருவதாக இயக்குனர் ராஜ்குமார் இவ்வாறே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.