உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 121 ஆண்டு மயான கொள்ளை திருவிழா முன்னிட்டு தொடர்ந்து 10 நாட்களாக வைபவம் நிகழ்ச்சி சௌந்தரராஜன் சுவாமி, சந்தான சுவாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. விழாவின் நிறைவு நாளையொட்டி, ஸ்ரீ அங்காள அம்மன், ஈஸ்வரனுக்கும் திருகல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பம்பை உடுக்கை மற்றும் கைலாய மேலதாளம் முழங்க பெண் வீட்டார் சீர்வரிசை எடுத்து வந்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திராளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா தலைமை ஆசிரியர் ஜான் மைக்கேல் அந்தோணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் விதமாக ர் கிட்ஸ் பள்ளி குழுமம், அன்பு அறக்கட்டளை மற்றும் செய்தி மக்கள் அமைப்பு சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை மாவட்ட தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். தொடர்ந்து மகளீர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டியும் கொண்டாடினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானவேல் திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாளையக்காடு பகுதியில் இருசக்க வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சரக்கு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக அவரது குடும்பத்தினர், இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி ஆஜராகி வாதாடி ஞானவேல் என்பவரது மனைவி சுகன்யாவிற்கு 80 லட்சத்திற்கான காசோலையை பெற்று தந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மீது மணல் கடத்தல், கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இவரை கத்தியால் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.