7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதி முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் எனவும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் , ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.