சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கருகுரங்கு, பச்சோந்திகள்…! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!! 2 பேர் கைது..!!
அபூர்வ வகை பச்சோந்தி மற்றும் கருங்குரங்கை விமானத்தில் கடத்தி வந்த மலேசிய பெண் பயணி உட்பட 2 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அறிய வகை விலங்கினங்கள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கசாவடி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது..
கிடைத்த தகவலின் படி நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசியாவில் இருந்து பெண் பயணி ஒருவர் எடுத்துவந்த பிளாஸ்டிக் பையில் ஆப்பிரிக்க நாட்டின் பச்சோந்திகள் 52ம் ஜியாமங்க் ஜிப்பான் இனத்தை சேர்ந்த கருங்குரங்குகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அதன் பின்னர் அந்த பெண்ணிடம் இதை பற்றி கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.. இதனால் சந்தேகித்த அதிகாரிகள் அந்த பெண்ணை ஒர் அறையில் அடைத்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவு துறைக்கு சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்குவந்த அதிகாரிகள் அந்த பெண் கடத்தி அந்த கருகுரங்கு மற்றும் பச்சோந்திகளை ஆய்வு செய்தனர்.
அப்போது பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியானது., அதாவது அந்த உயிரனங்களை தமிழகத்திற்கு கொண்டு அந்த மற்ற உயிரனங்களோடு விட்டால் அவை பல்வேறு நோய்க்கிருமிகள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் பறவைகள் போன்றவற்றுக்கும் பரவி நாடு முழுவதும் ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்..
அதன் பின்னர் அந்த உயிரனங்களுக்கு செலுத்தப்பட்டிருந்த விஷ மருந்துகளை எடுத்து அவற்றுக்கு சிகிச்சை அளித்து நேற்று இரவு மலேசியாவிற்கு அனுப்பி வைத்தனர்..
மேலும் அந்த மலேசியா பெண்ணிற்கு உதவி செய்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த மற்றொரு நபரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.. அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.. அதன்பின் அவர்கள் இருவரையும் சென்னை சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இன்று புழல் சிறையில் அடைத்தனர்.