சினிமாவிற்கு பாதை விதைத்த பாரதி ராஜா..!! இப்போதும் திருமணம் செய்துக்கொள்வேன்..!!
கோலிவுட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் இன்று வரை க்ளாசிக்காக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
பலர் சினிமாவுக்கு வருவதற்கு ரோல் மாடலாக இருந்தவர் தான் பாரதிராஜா. கிராமத்திலிருந்து ஒருவர் வந்து சினிமாவில் வெல்ல முடிய முடியும் என்ற நம்பிக்கையை பாரதிராஜாதான் பலமாக விதைத்தார்.
இந்தச் சூழலில் தனது முதல் காதல் குறித்து பாரதிராஜா கலகலப்பாக பேசியிருக்கிறார்.
செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை அவுட் டோருக்கு அழைத்து சென்ற பெருமைக்கு சொந்தக்காரர் பாரதிராஜா. அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமங்களிலிருந்து பலர் சென்னைக்கு திரைப்பட கனவோடு தைரியமாக படையெடுக்க ஆரம்பித்தனர்.
அதேபோல் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்டோர் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் திகழ்ந்தவர்கள்.
சினிமாவிற்கு பாதை விதைத்த பாரதி :
சினிமா என்றால் செட்தான் என இருந்த விதியை உடைத்து கிராமத்தின் வரப்புகளுக்கு கூட்டி சென்றவர். பாரதிராஜாவின் கண்கள் ஷாட் சப்பாணியை ஹீரோவாக்கிய பிறகுதான் கிராமங்களின் கண் சினிமா மீது நிலைக்குத்தி நின்றது.
அவரது ஒவ்வொரு படமும் மேல்தட்டு மனிதர்களின் கண்களிலிருந்து மறைந்துபோன கிராமத்து மனிதர்களையும், அவர்களின் குணாதிசயங்களையும் காட்சிப்படுத்தின.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தை அழிப்போம் என்றார் பாரதியார். ஒரு கிராமத்தானுக்கு கலை செல்லவில்லை என்றால் கலையை அழித்திடுவோம் என்ற இறுமாப்போடு சினிமாவுக்குள் வந்தவர் பாரதிராஜா. அவரது படம் ஆகட்டும், சீரியல் ஆகட்டும் அத்தனையும் அதைத்தான் உணர்த்தினயிருக்கு.
பாரதிராஜா இயக்கிய கடைசி படம் :
பாரதிராஜா 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். அவரது ஒவ்வொரு படமும் இன்று வரை கல்ட் க்ளாசிக்காக திகழ்பவை.
அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு ஓம் மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் நடிகராக பல படங்களில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளி வருகிறார்.
இதற்கிடையே கடைசியாக வெளியான மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜியில் பறவை கூட்டில் வாழும் மான்கள் கதையை இயக்கியிருந்தது. மேலும் கடைசியாக கள்வன் படத்திலும் நடித்திருந்தார்.
பாரதிராஜாவின் அறிமுகங்கள் செய்து வைத்த நட்சத்திரங்கள் யார் என்பது பற்றி ஒரு சிறு தொகுப்பாக பார்க்கலாம்…
இயக்குநர் பாரதிராஜா, ராதா, அம்பிகா, ராதிகா, ரேவதி, ப்ரியாமணி என பல நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் அனைவரும் வெறும் அழகை மட்டும் கொண்டிருக்காமல் தங்களது திறமையின் துணையோடு கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகைகளாக வலம் வந்தனர்.
பாரதிராஜவின் காதல் வாழ்க்கை பற்றி ஒரு பதிவு :
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா அளித்த ஒரு பேட்டியில், “என்னுடைய முதல் காதல் தோல்வியடைந்துவிட்டது. ஆனால் ஒன்று இப்போது அந்தப் பெண் வந்தாலும் நான் திருமணம் செய்துகொள்வேன்” என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பாரதிராஜாவுக்கு இன்னமும் முதல் காதலோட நினைவுகள் விட்டு போகலையே என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
– கவிப்பிரியா