ரக்கை வடிவமைப்பில் 6 வழி சாலை மேம்பாலம்..!! அச்சத்தில் மக்கள்..!!
இந்தியாவில் முதல் முறையாக ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் ரூ.143 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்ப மூலமாக ரக்கை வடிவமைப்பில் 6 வழி சாலை அமைத்து கட்டி வரும் மேம்பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்றால் மேம்பாலம் பாதிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படலாம் என்று பொதுமக்கள் அச்சம்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இரக்கை வடிவமைப்பில் மேம்பாலம் கட்டப்படவில்லை, அப்படி கட்டி பயன்பாட்டில் இருந்திருந்தால் மக்களுக்கு இது போன்ற அச்சம் ஏற்படாது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்துவும், விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை சார்பில் ஆம்பூர் சான்றோர்குப்பம் முதல் கண்ணிகப்புரம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 143 கோடி மதிப்பில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது.
மேம்பாலம் பணிகள் கடந்த 2023 ஜூன் மாதம் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று கடந்த 2024 மார்ச் மாதம் முடிவடைந்து இருக்க வேண்டும். ஆனால் மணல் தட்டுப்பாட்டால் மேம்பாலம் பணி தொய்வு ஏற்பட்டது. வரும் 2025 ஜனவரி மாதம் 10 ஆம் தேதிக்குள் மேம்பாலம் பணிகள் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று பொறுப்பு அதிகாரி தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக புதிய தொழில்நுட்ப வடிவமைப்பில் இந்த மேம்பாலம் கட்டி வருகிறது. இந்த மேம்பாலத்தில் 6 வழி சாலை அமைக்கப்படும், அதில் 8 மீட்டர் அகலம் சர்வீஸ் சாலையும், கழிவு நீர் செல்ல வசதி ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஹைதராபாத்தில் இதே வடிவமைப்பில் 4 வழி சாலை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தில் ஒரு தூண் அமைத்து இருபுறம் ரக்கை வடிவமைப்பில் சாலை அமைத்து வருவதால் மேம்பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்லும் போது மேம்பாலம் பாதிப்பு ஏற்பட்டு விபத்து நேரிடலாம் என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.
ஏன் என்றால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த வடிவமைப்பில் மேம்பாலம் காட்டப்படவில்லை, அப்படி கட்டி பயன்பாட்டில் இருந்திருந்தால் மக்களுக்கு இது போன்ற அச்சம் ஏற்படாது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மேம்பாலம் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் திடீரென சரிந்து விழுந்து பணியில் இருந்த கூலி தொழிலாளர்கள் 6 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவத்தால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய வந்த தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி அசோக் குமார் விபத்து குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்றுள்ளார். மேம்பாலம் பணி முடிந்த பின்னர் மேம்பாலத்தின் மீது அனைத்து வாகனங்கள் சென்றால் மட்டும் பொது மக்களின் அச்சம் நீங்கும் என்பது நிதர்சமான உண்மை
















