தமிழக வெற்றி கழகத்தின் மக்களின் பசிநீக்கும் திட்டம்..!! எந்த நாளில் தெரியுமா..?
தமிழக வெற்றி கழகத்தின் உன்னத திட்டமான ஏழை எளிய மக்களின் பசிநீக்கும் திட்டத்தின் 100வது வார விழாவை முன்னிட்டு 200 ஏழை எளிய மக்களுக்கு இலவச சேலைகள் வழங்க பட்டது.
தளபதி விஜய் அவர்கள் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது கடந்த மாதம் அக்கட்சியின் கொடி சென்னை பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திலும் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலும் ஏற்பட்டது.. அக்கொடியனது இரண்டு சிகப்பு நிறங்களுக்கு இடையே மஞ்சள் நிறத்திலும் அதில் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை பூவுடன் அச்சிடப்பட்டுள்ளது.. அதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது..
இந்நிலையில் கட்சிக்கு நேற்று காலை இந்திய தேர்தல் அங்கீகாரம் அளித்தது., அங்கீகாரம் பெறப்பட்டதை கொண்டாடும் விதமாக அக்கட்சியின் தொண்டர்கள் நேற்று தமிழ்நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்..
அதனை தொடர்ந்து நேற்று கோவை வேளாண்டிபாளையம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வாரம் தோறும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், விலையில்லா ஊட்டசத்து வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பால், அவித்த முட்டை, பழம், ரொட்டிகள் வழங்க பட்டு வருகின்றது.
இதன் 100வது வாரத்தை முன்னிட்டு இன்று ஏழை எளிய பெண்கள் பயனடையும் வகையில் பால், பழம், ரொட்டி, முட்டையுடன், கூடுதலாக இனிப்புகள், சேலை, மற்றும் மதிய உணவு வழங்க பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்த உன்னத திட்டங்களில் ஒன்றாக ஊட்டச்சத்து திட்டம் செயல்பட்டு வருகிறது.
இதனை தமிழக மக்களுக்கு தொடர்ந்து வழங்க தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி ரொட்டி, பால், முட்டை, வாழைப்பழம் வழங்கும் திட்டம் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில், தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதன் 100வது வாரம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கோவை மாவட்ட வடக்கு நகர தலைமை வேலாண்டிபாளையம் கிளை தலைவர் கில்லி பிரகாஷ், செயலாளர் பிரகாஷ், ஏற்பாட்டில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கோவை வடக்கு மாவட்டத் தலைவர் சம்பத்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.