சென்னையில் உடற்பயிற்சி கூடம்.. திறந்து வைத்த மேயர் பிரியா..!
சென்னை மாநகராட்சி 61 வது வார்டில் வெங்கு தெருவில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர்
இந்நிகழ்ச்சியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், 61-வது மாமன்ற உறுப்பினர் பாத்திமா முசபர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த பிறகு மேயர் பிரியா ஆர்வத்தோடு உடற்பயிற்சி செய்தார்.
-பவானி கார்த்திக்