“என்னை கொஞ்ச கொஞ்ச.. வா மழையே”
கடந்த ஒரு வாரமாகவே நம்ம இருக்கிற இடம் சில்லுனு இருக்குது. மழை பொழிந்த வண்ணமாக இருக்கிறது. அதுனால் மனிதர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கொளுத்தும் வெயிலினால் தவித்த மக்கள் மழையை பார்த்ததும் மனதில் துள்ளாட்டம் போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.
சில்லுனு சாரல் விழும் பொழுது பால்கனியில் ரசித்து கொண்டு இருக்க, முத்தம் கொடுத்தது போல் மழையின் துளிகள் என் கைவிரலில் படும்பொழுது மனதிற்குள் எதோ அளவில்லா மகிழ்ச்சியாக இருக்கும்.
உங்களுக்கு மழையில் நனைவது புடிக்குமா..? என்ன தான் மழையில் நனைந்து காய்ச்சல் வந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மழையில் நனைந்து என்ஜாய் பன்றவங்களா நீங்க..? அப்போ மழையோடு சேர்ந்து பாடல்களும் இருந்த இன்னும் ஒரு சந்தோசம் தான.
என்னை கொஞ்சுவதற்கு நீ தினமும் வா மழையை, இன்னும் கிட்ட கிட்ட வந்து என்னை தொட்டு சென்று நீ போ மழையை நீ தொடும் பொழுது எனக்கு தோழியாக மாறுகிறார் நீ தூறல் போடும் பொழுது, உன் மீது எனக்கு காதல் கொள்கிறது இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைக்க பாடல் பாடியவர்கள் ஹரிஹரன் மற்றும் சுஜாதா மோகன் சேர்ந்து பாடிய பாடல் இது.
என்னை கொஞ்ச
கொஞ்ச கொஞ்ச கொஞ்ச
வா மழையே நெஞ்சம் கெஞ்ச
கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே…..
வானத்தில் மேளம் அடித்து கொண்டு இருக்கிறார். எங்கேதான் போனாயோ இத்தனை நாளாக சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டாய்,அப்டியே சென்று விடுவாயோ, மீண்டும் சந்திப்போமோ இருவரும். முத்து மழையை என் மூக்கின்மேல் வந்து விழுந்துவிட்டாயாக வைராமாக என் காதினில் வந்து தோடுகள் போடு. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசைஅமைக்க பாடகிகள் கே.எஸ். சித்ரா, கல்பனா
சேர்ந்து பாடிய பாடல் இது.
நீ வரும்
போது நான் மறைவேனா
நீ வரும் போது நான்
மறைவேனா தரிகிட
தரிகிட தா…….
இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடாம யாரும் இருக்க முடியாது அந்த மாதிரி ஒரு பாடல். மழை பாட்டு என்றாலே இந்த பாடல்தான் சொல்லுவாங்க ஒரு காட்டிற்குள்ள சரியான ஆடை மழையில் நீங்க ஆடும் பொழுது மயில் தோகையை விரித்து ஆடும் மழையில் அதுமாதிரி நானும் ஆடுகிறேன்,குடையை விரித்து யாரும் மழையை தடுக்க வேண்டாம். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசைஅமைக்க பாடகர்கள் ராகுல் நம்பியார்,சைந்தவி சேர்ந்து பாடிய பாடல் இது.
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா….
குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்….
மழையை நீ தூவும் பொழுது என் அருகினில் என் காதலியை பார்க்கும் பொழுது, நீ சொல்லு மழையை இது காதல் தான எனக்கு தெரியவில்லை உன் ஆடை படும் பொழுது எனக்கு சாரல் அடிக்கிறது,நீ வெட்கப்படும் பொழுது தூறல் விழுகிறது, இசையமைப்பாளர் எஸ். தாமன் இசையில் பாடகர் ரஞ்சித் பாடிய பாடல்.
மழையே மழையே
தூவும் மழையே இது காதல்
தானா தனியேத்தனியே
நனைந்தேன் மழையே ம்ம்……
என்னதான் மழையை வைத்து எத்தனை பாடல்கள் எழுதியிருந்தாலும் 90ஸ் களின் நினைவிற்கு வருவது என்னவோ குஷி படத்தில் வரும் மேகம் கருக்குது .., மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே பாடல் தான்.. வைரமுத்து வரிகளில் ஹரிணி பாட தேவா இசையில் வந்த இந்த பாடல் ஒரு வைப் என சொல்லலாம்.
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே
நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
உங்களுக்கு பிடித்த மழை பாடல் எது..?