வேலைக்கு செல்லாதே என்ற கணவர்.. ஆத்திரத்தில் கொதிக்கும்…!
மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளியங்குன்றம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார் (32)-மாலதி(28). இதில் செந்தில்குமார் ஆட்டோ ஓட்டுநராகவும் மாலதி ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்தனர்.
ஆனால் மாலதி வேலை பார்ப்பது அவருடைய கணவருக்கு பிடிக்கததால் அடிக்கடி மனைவியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என செந்தில்குமார் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது மாலதியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என அவருடைய கணவர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மாலதி தன் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை எடுத்து ஊற்றினார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் 40சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதுகுறித்து தகவறிந்த அப்பன் திருப்பதி போலீசார் மாலதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
















