ஐசியூவில் மதிகப்பட்டுள்ள அதிஷி..! உடல்நலம் குறித்து மருத்துவர்கள் சொன்னது..!
தலைநகர் டெல்லியில் எற்பட்டுள்ள தண்ணீர் பற்றாகுறையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் டெல்லியில் பல்வேறு இடங்களில் மக்கள் காளிகுடங்களுடன் தண்ணீர் வேண்டி போராட்டம் செய்து வந்துள்ளனர்.
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு :
அரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு தண்ணீர் திறந்து விடாததே இந்த தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அது தொடர்பாக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மேலும் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய தண்ணீர் வர வேண்டுமென ஆம் ஆத்மி அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. மறுபக்கம் டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 22ம் தேதி முதல் இன்று காலை வரை காலவரையற்ற உண்ணா விரதம் இருந்து வந்துள்ளார்.
இதனால் அவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிஷியை உடன் இருந்தவர்கள் மீட்டு லோக் நாயக ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கூறுவதாவது. தொடர்ந்து 5 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் அதிஷி-யின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் சீரற்ற நிலைக்கு சென்று, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று டெல்லி மக்களுக்கு அரியானாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், எனது உடலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்து, எடையும் குறைந்துவிட்டது.
மேலும், உடலில் கீட்டோன் அளவு மிக அதிகமாக உள்ளது, இது நீண்ட காலத்திற்கு உடலுக்கு கடும் தீங்கு விளைவிக்கும். என் உடல் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அரியானாவில் இருந்து தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரதத்தை தொடர்வேன் என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்து இருந்தார்.
கடந்த மூன்று வாரங்களாக யமுனை ஆற்றில் இருந்து டெல்லிக்கு வழங்க வேண்டிய நீர் பங்கீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் கேலன்கள் வரை அரியானா அரசு குறைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரியானா அரசு யமுனை ஆற்றில் இருந்து வழங்க வேண்டிய நீரில் 100 மில்லியன் கேலன்களை குறைத்தால், டெல்லியில் 28 லட்சம் மக்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிஷி தெரிவித்து இருந்தார்.
இதனிடையே டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா, ஆம் ஆத்மி குழுவினர் அரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக நயப் சிங் சைனி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ