2038-ல் உலகத்திற்கு காத்திருக்கும் ஆபத்து.. அதிர்ச்சி கொடுத்த நாசா..
சமீபகாலங்களாகவே உலகத்திற்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு கொரோனா பரவல், 2020ஆம் ஆண்டு லாக்டவுன், பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்சனைகளில் பாதிப்பை கண்டது.
அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பருவமழை மாற்றத்தின் காரணமாக பல்வேறு உலக நாடுகள் பாதிப்புகுளானது.
அதாவது வெயில் அடிக்கும் இடங்களில் மழையும் மழை பெய்யும் இடத்தில் கடும குளிரும் குளிர் வீச வேண்டிய இடத்தில் வெல்லமும் ஏற்பட்டு பொதுமக்களை வாட்டி வதைத்தது.
இவ்வாறு உலகம் பல்வேறு பேரிடர்களை சந்தித்தது. அந்த வகையில் பூமிக்கு வர இருக்கும் புதிய ஆபத்து குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை நாசா தெரிவித்துள்ளது.
அதன்படி வரும் 2038ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பூமி மீது சக்தி வாய்ந்த குறுங்கோள் மோத 72 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக நாசா மேற்க்கொண்ட ஆய்வில் கூறியுள்ளது.
மேலும் இது மிகப்பெரிய இயற்க்கை பேரிடராக இருக்கும் எனவும் இதை தடுக்கும் அளவிற்கு நாம் இன்னும் தயராகவில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது.
-பவானி கார்த்திக்