விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்… அர்ஜூன் பேட்டி…!
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிய போதும், இன்னும் முடியாமல் உள்ளது.
இவ்வாறு ஷூட்டிங் தாமதம் ஆவதற்கு, நெருங்கிய வட்டாரங்களில் இருந்து பல்வேறு தகவல்கள் கூறப்பட்டு வருகின்றனர். இதனால், ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அர்ஜூன், தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர், விடாமுயற்சியின் அப்டேட்டையும் வழங்கியுள்ளார்.
அதாவது, இப்படத்தின் 70% சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது என்றும், இன்னும் 30 சதவீத ஷூட்டிங் மட்டும் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த மாதம், அசர்பைஜான் நாட்டில் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்

















