கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து… இனிப்பு கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு..!
திண்டுகல் மாவட்ட பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் தேனி செல்வதற்காக பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை ஓட்டுநர் சுப்ரமணி இயக்கி உள்ளார்.
பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்து ப்ரேக் ஒயர் பழுத்தானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நேராக இருந்த இனிப்பு கடைக்குள் புகுந்தது.
இதில் கடைக்குள் இருந்த பெண் காயம் அடைந்ததால் அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து கடைடககுள் புகுந்த பேருந்தால் கடையில் உள்ள பொருட்கள் கண்ணடிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.
அரசு பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்கமால் இருப்பதால் அடிககடி பழுதாகி நிற்பத்தோடு இல்லாமல் இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்வதும் வாடிக்கையாகி உள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து பேருந்து முறையாக பராமரித்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காது என்று பொது கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தால் திண்டுகல் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பொது மக்களிடயே பதற்றம் ஏற்பட்டது.
-பவானிகார்த்திக்