கலைஞர் ஆசியோடு இந்தியாவில் நாளை ஒரு விடியல்..! செல்வபெருந்தகை பேட்டி..!
‘பாசிச ஆட்சி இந்த தேசத்தை வழி நடத்திக் கொண்டிருக்கிறது நாளை முடிவுக்கு வரப்போகிறது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆசியோடு இந்தியாவில் நாளை ஒரு விடியல் பிறக்க இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி..”
தமிழக அரசியல் வரலாற்றிலும் இந்திய தேசிய அரசியல் வரலாற்றிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனிப் பெரும் தலைவராக விளங்கிய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்..,
முத்தமிழறிஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நிறைவடைந்து 101 ஆவது பிறந்த நாள் இன்று, அவரது திருவுருவுச்சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம், கலைஞர் என்பவர் ஒரு அடையாளமாக மனசாட்சியாக இந்த தேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று கூறிய அவர் சமூக நீதிக்கு மிகப்பெரிய பாதையை அமைத்தவர் என்று புகழாரம் சூட்டிய அவர் இந்தியாவில் குடிசைகள் இருக்கக் கூடாது என்று இங்கே அடிக்கல் நாட்டினார், பல முன்னோடி திட்டங்களை தமிழ்நாட்டிற்கு குடையாக கொடுத்தவர் என்று கூறினார்..
மேலும் பேசிய அவர் கலைஞரின் கொள்கைகளும் கோட்பாடுகளும் நிறைய தேவைப்படுகிறது நாமெல்லாம் பின்பற்ற வேண்டும், பாசிச ஆட்சி இந்த தேசத்தை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.
நாளை முடிவுக்கு வரப்போகிறது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆசியோடு இந்தியாவில் நாளை ஒரு விடியல் பிறக்க இருக்கிறது. அவர் இறந்துவிட்டாலும் அரசியலில் எல்லோரையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். என்று புகழாரம் சூட்டினார்..
கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு அது மோடியோடு கருத்து திணிப்பு, 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி அமைப்பார்கள் என்று கருத்துக்கணிப்பு வந்தது ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது, மோடியோடு கருத்து திணிப்பு, இரண்டு மாதத்திற்கு முன்பு இதை தயார் செய்துவிட்டு இதை செய்திருக்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கே உள்ளது என்று தேட வேண்டிய நிலைமை உள்ளது, ஒரு உள்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர்களை மிரட்டுகிறார், நாளை புதிய விடியல் ஏற்படும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும், 150 இடங்களை மட்டுமே பாஜக பிடிக்கும் என்று கூறினார்..
இதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
– லோகேஸ்வரி.வெ