சாதி தூண்டல்..! இயக்குனர் ரஞ்சித்துக்கு வந்த அடுத்த சிக்கல்..!! ரவுடி தீபக் கொலை மர்மம்..!
நெல்லை மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா (30). இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரது தோழிகளுடன் கேடிசி நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தபோது அடையாளம் தெரியாத 6 பேர் கண் இமைக்கும் நேரத்தில் தீபக் ராஜாவை வெட்டி கொலை செய்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்.., 6 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீதும், ஜாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பா. ரஞ்சித் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இயக்குனர் பா. ரஞ்சித் எக்ஸ் பக்கம் :
திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால் இனபடுகொலை செய்யப்பட்டது. முத்து மனோவின் நண்பர் பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் “தீபக் ராஜா” பாளையங்கோட்டையில் சாப்பிட வந்த நபரை கொலை செய்யப்பட்டிருப்பது வேதனை குறியது
சக மனிதர்களை மனிதனாக பார்க்காமல் படுகொலை செய்யும் சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்., கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கிட உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இவரது இந்த பதிவிற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் இயக்குனர் பா. ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், இயக்குனர் பா.ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டிவிட முயற்சிக்கிறார். திருநெல்வேலியில் தீபக் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை கூறி குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதனால் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ