மூடப்பட்ட மதுரை அழகர் கோவில் மலை பாதை..! அதிர்ச்சியில் பக்தர்கள்..!! இனி பழமுதிர்சோலை.!!
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படுகிறது., 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த அழகர் மலையின் அடிவாரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் உயரத்தில் முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலை அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று மதுரை அழகர்கோவில் மலைப்பாதை திடீரென மூடப்பட்டுள்ளது.
மதுரை அழகர் மலையின் அடிவாரத்தில் இன்று மலை பாதை திடீரென மூடப்பட்டதால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதற்கான காரணம் குறித்த விசாரித்த போது, மலைப்பாதையில் பாலபணிகள் நடைபெற்று வருவதால், பாதைகள் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இன்று திடீரென மலைப் பாதைகள் மூடப்பட்டு வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டதால் பழமுதிர்சோலைக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து பக்தர்கள் கூறுவதாவது, பாதைகள் மூடுவது குறித்து ஏதேனும் முன் அறிவிப்பு கொடுத்து இருந்தால் நாங்கள் கோவிலுக்கு வந்து இருக்க மாட்டோம் என கூச்சலிட்டு மலை பாதையின் அடிவாரத்திலேயே அமர்ந்துள்ளனர்.
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்.., பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாற்று பாதை அமைத்து தருகிறோம் என நம்பிக்கை தெரிவித்த பின்னரே களைந்து சென்றனர்..