விஜயபிரபாகரன் போட்டியிடும் அந்த தொகுதி..? பிரமேலதா வெளியிட்ட சூப்பர் அப்டேட்..?
தேமுதிக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.விருப்ப மனுவை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார்.
முன்னதாக, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, மத்திய சென்னை தொகுதிகளை அதிமுக தலைமை ஒதுக்கியிருக்கிறது.
இதையடுத்து, அதிமுக – தேமுதிக இடையே இன்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த நிலையில், தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயபிரபாகரன் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு வழங்கியுள்ளார்

















