இயக்குனர் சித்திக் மறைவிற்கு நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழில் பிரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை இயக்கியவர் சித்திக். நடிகர் லாலுடன் இணைந்து சித்திக் – லால் என்ற பெயரில் ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் இயக்குநர் சித்திக் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.