சென்னை கல்லூரி புல்லிங்கோவின் அட்ராசிட்டி..!! சிக்கி தவிக்கும் பேருந்து பயணிகள்..!!
என்ன தான் அதிக பேருந்து இயக்கினாலும், காலியாக இருந்தாலும் கூட.., நாங்க செய்யுறததான் செய்வோம் என சொல்லுபவர்கள் தான் இந்த “புல்லிங்கோ” பேருந்தில் படிக்கட்டில் நின்ற படி பயணம் செய்வது தவறு என தெரிந்து இருந்தும்.., சில நாட்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டை தியாகாராய கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மேல் ஏறி நின்று பயணம் செய்து மக்களுக்கு இடையூறு அளித்ததால்.., போக்குவரத்து காவல் துறையினர் தண்டனை கொடுத்தனர்.
அதை பார்த்தும் கூட திருந்தாத இன்னும் சில மாணவர்கள் சுற்றி திரிந்து கொண்டு தான் இருக்கின்றனர். அதிலும் முக்கியமாக பெரம்பூர் டூ பெசன்ட் நகர், பிராட்வே டூ கொரட்டூர், பிராட்வே டூ கண்ணதாசன் நகர், பிராட்வே டூ கோயம்பேடு, ரூட் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டும் பேருந்தின் மேல் ஏறி கொண்டு செல்கின்றனர்.
இது குறித்து நடத்துனரோ அல்லது ஓட்டுனரோ கேட்டால் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதோடு.., அவர்களை தாக்கியும் விடுகின்றனர், இதனால் நடத்துனரும் ஓட்டுனரும் கூட மாணவர்களை கேள்வி கேட்பதற்கு அஞ்சு கின்றனர்.
இன்று காலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மேல் ஏறி அட்டகாசம் செய்துக்கொண்டே சென்றுள்ளனர்.., இதனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார், மாணவர்களை உள்ளே வர சொல்லி இருக்கிறார்.
ஆனால் இந்த மாணவர்கள் கேட்கவில்லை.., மற்ற பயணிகளுக்கு கால தாமாதம் ஆகுமே என்று கூட நினைக்காமல் நாங்க இப்படி தான் என சொல்லும் வகையில் சேட்டை செய்துள்ளனர்.., பின் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் போக்குவரத்து காவல் துறைக்கு புகார் அளித்துள்ளார்.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் மாணவர்களை கீழே இறக்கி பேருந்தை இயக்க உதவி செய்துள்ளார்.., இதனால் ஒரு மணி நேரம் பேருந்து தாசப்பிரகாஷ் பேருந்து நிறுத்தத்திலேயே நின்றுள்ளது.
















