பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது..! கொலைக்கான காரணம்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே அவரது ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
அப்போது அவரை காப்பாற்ற வந்த ஆதரவாளர்களையும் அந்த மர்ம நபர்கள் வெட்டி தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது ஆதரவாளர்களை மீட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செம்பியம் காவலர்கள், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கைப்பற்றி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆணையர் அஸ்ரா கார்க் பேசியதாவது,
“தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தற்போது 8 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகிறோம்.. விசாரணைக்கு பின்னர் தான் கொலையின் உண்மையான நோக்கம் என்னவென்று தெரியவரும். கொலை சம்பவம் நடந்த வெறும் நான்கு மணி நேரத்தில் 8 நபர்களை கைது செய்து உள்ளோம்.
கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த கொலை சம்பவத்தின் போது கொலையாளிகள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை கத்தியால் வெட்டி தான் கொலை செய்துள்ளனர்.
கொலைக்கான நோக்கம் மட்டுமின்றி அவர்களின் பின்னணியில் இருப்பது யார் என்பது பற்றிய தகவல்களை விரைவில் அறிவிப்போம் என ஆணையர் அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் விவரம் :
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு நபர்களின் பெயர்கள். பொன்னை பாலா, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..