78 ஆவது சுதந்திர தின விழா… தென்காசியில் கோலகலம்..!
தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
அமைதியை நிலை நிறுத்துவதை உறுதிப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். சீனிவாசனும் இணைந்து சமாதான புறாக்களை பறக்க விட்டனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய 482 பேருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுதந்திர இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசியக்கொடியினை மாவட்ட ஆட்சியர் உமா கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
ரூபாய் 27 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை அனைத்துதுறை சார்ந்த 26 நபர்களுக்கு வழங்கினார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் உமா மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சமாதானத்தை ஏற்படுத்தும் விதமாக புறாக்களையும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். இதனைத்தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர தியாகிகளின் வாரிசுகளுக்கு மலர் கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்தார்.
பின்னர் தீரவீரம் புரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதனை அடுத்து அனைத்துதுறை சார்பில் சுமார் 26 நபர்களுக்கு 27 லட்சத்தி 21 ஆயிரத்து 129 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் தேசியத்தை விளக்கும் வகையில் பாடல்கள் பாடி நடனம் ஆடினர் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
-பவானி கார்த்திக்