76-வது குடியரசு தினம்..!! விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
76வது குடியரசு தின விழாவில் காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு பல்வேறு பதக்கம் மற்றும் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முன் கொடியைற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை, காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்ஷா என்பவருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதையும், வழங்கினார்.
எஸ்.ஏ. அமீர் அம்ஷாவுக்கு மத நல்லிணக்க விருதுடன் 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அதேபோல் இரண்டாம் நிலை ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு பரிசுகளை வழங்கினார். குடியரசு தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளில், அனைவருக்கும் நீதி, சமத்துவம், மாண்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தைப் போற்றுவோம். முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு நினைவூட்டட்டும். அனைவருக்கும் நம்பிக்கையும் நல்நோக்கமும் நிறைந்த குடியரசு நாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..