7 முறை தற்கொலை முயற்சி..!! இயக்குனர் செல்வராகவன் பகீர்..!!
சமீக காலமாக சோசியல் மீடியாவில் தன்னை பற்றிய கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் இயக்குனர் செல்வராகவன், தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் 7 முறை தான் செய்துகொள்ள முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் உலகம் முழுவதும் பார்த்தால் வாழ்க்கையில் இந்த இரண்டையும் முயற்சிக்காதவர்கள் இருக்க முடியாது.
ஒன்று தற்கொலை முயற்சி, மற்றொன்று டிப்ரஷன் தான். ஒவ்வொரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்யும்போதும் எனக்குள் ஒரு குரல் கேட்கும். ஏதோ சொல்வது மாதிரி, ஏதோ கேட்கிற மாதிரி இருப்பதை உணர்வேன்.
நம்மிடத்தில் கடவுள் தான் ஏதோ சொல்லுகிறார் என நினைத்து தற்கொலை முயற்சியை கைவிட்டு விடுவேன். ஒரு ஆறு மாதம் ஒரு வரும் வருடம் கழித்து மகிழ்ச்சி ஏற்படும்.
அப்போ நாம் தற்கொலை முயர்சி செய்து இருந்தால் இந்த சந்தோஷத்தை இழந்து இருப்போமே என்று நினைத்துக் கொள்வேன்…
வாழ்க்கையில் இதுதான் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களின் உண்மையான நோக்கம். அடுத்த ஜென்மத்தில் நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதாக தான் இருக்கும். சுவிசர்லாந்தில் உள்ள ஒரு குடியிருப்புல் பிறந்து சந்தோஷ்மாக வாழ வேண்டும் என்று நினைப்போம்..
ஆனால் கூவத்தில் பிறந்து பன்னியாகவோ காட்டில் மரத்தில் தொங்கும் பேயாகவோ பிறந்தால் யார் என்ன செய்ய முடியும்.
நமக்குள் கேட்கும் அந்த குரல் கடவுளின் குரலாக அல்லது வேறு நபரின் குரலாகவோ இருகலாம். அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள்.
ஆனால் அந்த குரல் உங்களுக்குள் கேட்காமல் இருக்காது. அது உண்மையானது என்று அந்த வீடியோவில் கூறி இருக்கிறார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..