தமிழ்நாட்டில் நேற்றுடன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்த நிலையில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிவரை 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஆண்டு தேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 11ம் தேதி தமிழ், 12ம் தேதி ஆங்கிலம், 18ம் தேதி கணக்கு, 19ம் தேதி அறிவியல், 24ம் தேதி சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதமே கோடை விடுமுறையை அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
Discussion about this post