50,000 வரை நாட்டம் ஏற்பட்டதால் குமறும் ராமேஸ்வரம் மீனவர்கள்..!!
ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் 700 க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைபடகில் மீன் பிடிக்க செல்கின்றனர். மீன் பிடிக்க தடைகாலம் முடிந்தும்.., ஒரு சில மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். எதிர்பார்த்த அளவிற்கு மீன் கிடைக்காததால், ஒரு படகிற்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
விசை படகு ஒன்றிற்கு இறால் 200 கிலோ முதல் 300 கிலோ வரையிலும் நண்டு 50 கிலோ முதல் 100 கிலோ வரையிலும் குறைந்த அளவே கிடைத்துள்ளதால் படகு ஒன்றிற்கு 30,000 முதல் 50,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.
இது மீன் பிடி தடை காலம் என்பதால், அதிக திறன் இன்ஜின் கொண்ட படகு வைத்திருக்கும் மீனவர்கள், கடலுக்குள் சென்று மீன்களை பிடித்து விடுகின்றனர். இதனால் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது.
ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என.., மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மீன்பிடி தடை காலத்தில் நாட்டு படகுகள் மீன்பிடிக்க செல்வதை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.