4620 கோடி ரூபாய் மோசடி..!! ஹிஜாவு நிறுவன நிர்வாகிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையில் செயல்பட்டு வந்த ஹிஜாவு நிதி நிறுவனத்தில் முதலீட்டிற்கு 15 சதவீதம் வட்டி தருவதாகக்கூறி, 4 ஆயிரத்து 620 கோடி ரூபாயை மோசடி அந்நிறுவனம் மோசடி செய்துள்ளதாக சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்..
மக்கள் அளித்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட 14 பேரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் அந்த வழக்கில் தொடர்புடைய ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸும் விடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய நிர்வாகிகளான ரவிச்சந்திரன், ஜெயக்குமார், சுரேஷ், துரைராஜ் ஆகியோருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்திருந்தனர். முன்னதாகவே இந்த பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கிய நிலையில் தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி முக்கிய நிர்வாகிகள் 4 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும், அதனால் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் இன்னும் பலர் தலைமறைவாக உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார். தொடர்ந்து காவல்துறை தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.