43.89 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம்..!! சுற்றுலா தளமாக மாற போகும் அணை..!! அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!!
குடியாத்தம் நகரில் ரூ. 43.89 கோடி மதிப்பீட்டில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலத்தை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார் மோர்தானா அணை பகுதியை சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கபடும் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் கவுண்டன்ய நதியின் குறுக்கே புதியதாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் ரூ.43.89 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது அதன் திறப்பு விழாவானது இன்று மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ,சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,அமுலு,உள்ளிட்டோரும் திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்..
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் குடியாத்தம் நகரம் என்பது வேலூர் மாவட்டத்தில் மிகவும் பெரிய நகரம். மக்கள் மற்றும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி. இப்பகுதியில் இது போன்ற ஒரு பாலமும் ஒரு சாலையும் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அது இப்பொழுது நிறைவேறி உள்ளது. மோர்தானா அணையை சுற்றுலா தளமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்களின் மூலம் வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் சுற்றுலாத்துறை அமைச்சரை மோர்தானா அணைக்கு அழைத்து வந்து அந்த இடத்தை சிறு சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இங்கே அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை மற்றும் தரைப்பாளம் பணிகளுக்காக அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களில் வீடு இல்லாத ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நிச்சயம் அரசின் சார்பில் வீடு வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு ஆடாமல் அசையாமல் படகு போன்று நிலைத்த அரசாக சென்று கொண்டிருக்கிறது. முதல்வர் அவர்கள் எந்த ஒரு செயலையும் பொறுமையாக கையாளக் கூடியவர். என பேசினார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..