சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கல்லூரி மாணவர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கினர் தண்ணீரில் மூழ்கியவர்களின் கதி என்ன போலீசார் தீயணைப்பு படை வீரர்கள் துணையுடன் தேடும் பணி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கும் 8 மாணவர்கள் மற்றும் மேட்டூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 10 பேர் இன்று மதியம் கல்லூரி செல்லாமல் விடுமுறை எடுத்து கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்,அதில் கன்னந்தேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன்,எருமப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி, எட்டிகுட்டைமேடு பகுதியை சேர்ந்த பாண்டியராஜன், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 மாணவர்கள் காவிரி ஆற்றில் மேடான இடத்தில் குளித்து கொண்டிருக்கும் போது விளையாட்டாக ஆழமான பகுதிக்குள் சென்றுள்ளனர் அதில் 4மாணவர்களும் தண்ணீரில் முழ்கி உள்ளனர் இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டதை தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் 4 மாணவர்களை மீட்க முயற்சி செய்து தோல்வியடைந்தனர்.
இதனையடுத்து எடப்பாடி தீயணைப்பு துறையினர்க்கும் தேவூர் போலிசாருக்கும் தகவல் அளித்தனர் இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதனை தொடர்ந்து அவர்களுடன் வந்த சக மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தண்ணீரில் முழ்கியவர்களின் கதி என்ன என தேவூர் உதவி ஆய்வாளர் ஸ்ரீராம் தலைமையில் போலீசார் தீயணைப்பு படையினர் கொண்டு தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மணிகண்டன் என்ற மாணவனின் சடலம் மீட்கபட்டுள்ளது
















