போக்குவரத்திற்கு இடையூறு தரும் மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம்!!
மயிலாடுதுறையில் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.
மயிலாடுதுறையில் நகர பகுதிகளில் அதிகப்படியான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகளை மாடுகள் அச்சுறுத்துவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக விதிமுறைகளை மீறி சாலையில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி ஆணையர் சங்கர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில், சாலைகளில் சுற்றி திரிந்த 39 மாடுகள் மற்றும் கன்று குட்டிகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலையில் அடைத்தனர். மேலும், மாடுகளின் உரிமையாளருக்கு தற்போது வரை 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.