கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே விஷவாயுத்தாக்கி மூன்று பேர் பலியான சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தில் புதிதாய் அமைக்கப்பட்ட எட்டடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கி கட்டுமான பணிகளை பிரித்துக் கொண்டிருந்தபோது மூன்று பேர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலி.
கிருஷ்ணமூர்த்தி(40) என்பவர் வீட்டில் பின்புறம் நிகழ்ந்துள்ளது இதில் கிருஷ்ணமூர்த்தி(40) கொத்தனார் என்கிற பாலச்சந்திரன் (32) மற்றும் சக்திவேல்(22) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடல்களை கைப்பற்றிய போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post