கத்தியுடன் ரீல்ஸ் செய்த 2கே கிட்ஸ்கள்..! போலீஸ் செய்த அதிரடி..!
கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (19). இவர் தனது சமூக வளைத்தல பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி 1லட்சத்திற்கும் மேலாக லைக்ஸ்களை குவித்து வருகிறது. அப்படி என்ன வீடியோல இருக்குனு தற்போது பார்க்கலாம்..
அதாவது 2k கிட்ஸ்-ஆன சந்துரு தனது நண்பருடம் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரீல்ஸ் வீடீயோகளை வெளியீடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது நண்பர் ரஞ்சித் என்பவர் உடன் சேர்ந்து கத்தியை வைத்து சினிமா பாடலுக்கு ரீல் செய்து பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோ தொடர்பாக கொளத்தூர் போலீசார் கத்தியை வைத்து வீடியோ பதிவிட்ட இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் போலீசார் வாகன தணிகையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த சந்துருவை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்ற காவலில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவான அவரது நண்பனை தேடிவருகின்றனர். பின்னர் இது தொடர்பாக சென்னை காவல்துறை தனது வலைதள பக்கத்தில் ரீல்சும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம், நல்லொழுக்கமே நன்மை பயக்கும் என்று பதிவிட்டுள்ளன.
-பவானி கார்த்திக்