தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்வு..!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!
தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்க சாவடிக்களுக்கும் செப்டம்பர் மாதம் முதல் மீதமுள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.
அதன் படி 2023ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1 தேதி நள்ளிரவு முதல் திண்டுக்கல், திருச்சி,சேலம் ,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
செப்டம்பர் 1ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது . கார், வேன்,ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும், இரு முறை சென்று வர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாகவும். மாதாந்திர கட்டணம் ரூபாய் 2505 இல் இருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post