20 கோடியில் புது மருத்துவமனை கட்டிடம்.. பணிகள் இன்று தொடக்கம்..!
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி, செந்துறை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவமனை கட்டிடம் 20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு அவசர சிசிக்சை பிரிவு (கிரிட்டிகல்கேர்செண்டர்) மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும் இந்த சிறப்பு சிகிச்சை பிரிவில் பாம்புகடி, நாய்கடி, விபத்து காயங்களுக்கான முதலுதவி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது.
மேலும் செந்துறை ஒன்றியம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லாம்பாளையம், உஞ்சினி, இராசபாளையம், குமிழியம் மற்றும் பரணம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 59.75 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்து, குமிழியம் கிராமத்தில் 7.35 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக்சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனிமேரிஸ்வர்ணா, முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மருத்துவ அலுவலர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-பவானி கார்த்திக்