வாலிபரின் வங்கிகணக்கில் 2கோடி..!! ED அதிரடி..!! பின்னணியில் பகீர்..!!
திருவள்ளூர் மாவட்டத்தில் 3 வாலிபர்களின் வங்கி கணக்கில் தலா 2கோடி ரூபாய் கிரெடிட் ஆக்கியுள்ளது.. இதுக்குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.. இந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
கடந்த சில மாதங்களுக்கு முன் எளிய மக்களின் வங்கி கணக்கில் கோடி ரூபாய் பணம் கிரெடிட் செய்யப்பட்டு பின் அது வங்கியின் தவறு என்றவாறு பல செய்திகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது.. தற்போது சில நாட்களாக அந்த தவறுகள் நிகலாமல் இருந்தது.. அப்படியாக தற்போது திருவள்ளூரில் ஒரு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது…
சட்ட விரோத பணபரிமாற்றம் செய்யப்படுவது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது விசாரணை செய்வது வழக்கம் அதாவது அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என முறைகேடு புகார்களுக்கு உள்ளாகும் முக்கிய புள்ளிகள் வீடு., வங்கி கணக்கு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது வழக்கம்…
இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் குமாரரஜூப் பேட்டை பகுதியில் வசித்து வரும் தமிழரசன், பிரகாஷ், அரவிந்தன் ஆகிய இளைஞர்களின் வங்கிக் கணக்கில் திடீரென 2 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று இளைஞர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்…
வங்கி கணக்கில் இவ்வளவு பணம் எப்படி வந்தது..? டெபாசிட் செய்தது யார்..? என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் 1.80 கோடி ரூபாயை அந்த இளைஞர்களை உடனே எடுக்க காரணம் என்ன..? என்பது பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தது.. இளைஞர்கள் மூன்று பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்ததாகவும், அப்போது அவர்களின் சம்பள பணத்தை அனுப்புவதற்காக வங்கி கணக்கு விவரங்களை தனியார் நிறுவனம் எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது…
அதையடுத்து, 3 பேரின் வங்கி கணக்கிலும் பல கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.. இந்த விவரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.. குறிப்பிட்ட இந்த 3 பேரின் வங்கி கணக்கில் மட்டும் பண பரிவர்த்தனை செய்ய என்ன காரணம் என்பது குறித்து அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்..