பட்டியல் இன மக்களுக்கான 18 சதவீகித இட ஒதுக்கீடு..!! எந்த பதவியில் யார்..?
பட்டியலின மக்களுக்கான 18 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டில் யார், யார் எந்த உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு.. வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என புதிய தமிழக கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பட்டியலின மக்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், அருந்ததியினருகென 3 விழுக்காடு முன்னுரிமை உள் இட ஒதுக்கீடு அளிப்பதன் மூலம், 18 விழுக்காட்டுக்குள் வரும் பிற சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பாதிக்கும் என்றார்.
பட்டியல் இன மக்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும், தமிழக அரசு துறைகளில் 56 உயர் பதவிகளில் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், எந்தெந்த சாதியினர், எந்தெந்த உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.. என்று தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர்.
பட்டியலின மக்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு மட்டும் 3 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு அளித்திருப்பதை ஏற்க முடியாது என்றும், இது பிற சமூக மக்களின் இட ஒதுக்கீட்டை பறிக்கும் செயல் என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..