தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் காவலர் வீட்டுவசதி கழகத் தலைவராகவும்,
சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜியாக உள்ள தினகரன், கூடுதல் பொறுப்பாக சிலை திருட்டு தடுப்பு பிரிவிலும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல் காவல் ஜெனரல் பிரிவு ஐஜியாக இருந்த செந்தில்குமார் மேற்கு மண்டல ஐஜியாகவும்,
மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வரி காவல் துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாகவும்,
காவல்துறை விரிவாக்கப் பிரிவு ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா திருநெல்வேலி போலீஸ் கமிஷனராகவும்,
மாநில மனித உரிமை ஆணைய இயக்குநராக இருந்த மகேந்திர குமார் ரத்தோட் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாகவும்,
சமூகநீதி மற்றும் மாநில மனித உரிமை ஐஜியாக இருந்த சாமூண்டீஸ்வரி காவல் ஜெனரல் பிரிவு ஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல், சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராகவும்,
சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாகவும்,
காவலர் நலன் பிரிவு ஐஜியாக இருந்த நஜ்முல் ஹோடா காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாகவும்,
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த மூர்த்தி திருநெல்வேலி சரக டிஐஜியாகவும்,
திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்த பிரவேஷ் குமார் சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை கமிஷனராகவும்,
சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை கமிஷனராக இருந்த அபிஷேக் தீட்சித் சென்னை ரயில்வே டிஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் திண்டுக்கல் சரக டிஐஜியாக இருந்த அபினவ் குமார் ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும்,
ராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்த துரை காவலர் நலன் பிரிவு டிஐஜியாகவும்,
சென்னை பெருநகர வடக்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த தேவராணி வேலூர் சரக டிஐஜியாகவும்,
வேலூர் சரக டிஐஜியாக இருந்த சரோஜ் குமார் தாக்கூர் சென்னை பெருநகர கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..